fbpx

சமைக்க நேரமில்லையா.! ஈசியாக 5நிமிடத்தில் செய்யக்கூடிய முட்டை குழம்பு.! எப்படி செய்யலாம்.!?

தற்போது பண்டிகைக்கான விடுமுறைகள் எல்லாம் முடிந்து குழந்தைகள் மறுபடியும் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் காலையிலேயே எழுந்து விரைவாக சமைத்து முடிப்பது என்பது அம்மாக்களுக்கு சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. இதன்படி ஐந்தே நிமிடங்களில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக முட்டை குழம்பு செய்வது எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?

தேவையான பொருட்கள்
முட்டை – 5, தக்காளி- 2, வெங்காயம் 2, பச்சை மிளகாய் -1, எண்ணெய் – தேவையான அளவு, கடுகு -1ஸ்பூன், பெருஞ்சீரகம் – 1/2 ஸ்பூன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, மசாலாத்தூள் – 2 தேக்கரண்டி, கொத்தமல்லி – கைப்பிடி அளவு, கரம் மசாலா -1 ஸ்பூன்

செய்முறை

முதலில் வெங்காயம் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போன்றவற்றை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்து வந்ததும் அதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் அளவு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பின்பு அதில் 5 முட்டைகளையும் உடைத்து ஊற்றி தீயை குறைத்து முட்டையை வேக விடவும். முட்டை வெந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை குழம்பு ரெடி.

Baskar

Next Post

அசத்தல்...! உறுப்பினர்கள் சேர்க்கை.. EPFO வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு...!

Sun Jan 21 , 2024
இபிஎப்ஓ நவம்பர் 2023 இல் 13.95 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது இபிஎப்ஓ-வின் தற்காலிக ஊதிய தரவு 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. 2023 நவம்பரில் இபிஎப்ஓ 13.95 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது என்பதை ஜனவரி, 2024 எடுத்துக்காட்டுகிறது. நடப்பு நிதியாண்டில் உறுப்பினர்களின் ஒட்டுமொத்த நிகர சேர்க்கை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட தொடர்ந்து அதிகமாக உள்ளது. 2023 நவம்பரில் சுமார் 7.36 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்று […]

You May Like