பொதுவாகவே பலரது வீடுகளில் இருக்கும் பக்கெட், உப்புக் கரை படிந்து அழுக்காக இருக்கும். பலர் அதை கண்டுக் கொள்வது கிடையாது. இன்னும் சிலர், அதை உயிரைக் கொடுத்து தேய்த்து சுத்தம் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் அந்த பக்கெட்டை தூக்கி போட்டு விட்டு, புதுசே வாங்கி விடுவார்கள். ஆனால் அதற்கு அவசியமே இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி, எவ்வளவு கடினமான உப்புக்கரையையும் எளிதாக நீக்கி விடலாம்.
இதற்கு ஒரு சிறிய சிறிய பாத்திரத்தில், சிறிது உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன், சிறிது வினிகர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது ஒரு ஸ்க்ரப்பரை இந்த கலவையில் தொட்டு, உப்புக் கரை உள்ள பக்கெட்டில் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி இவ்வாறு செய்தால் உப்புக் கரைகள் நீங்கி, பக்கெட் புதுசு போல் மாறிவிடும். பின்னர், ஒரு துணி கொண்டு பக்கெட்டின் வெளிப்புறத்தை துடைத்து, சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும்.
இப்படி பக்கெட் மீது தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால், மேலும் உப்புக் கரை பரவுவதை தடுக்கும். ஒரு சில நேரங்களில், நாம் கிட்சனில் பயன்படுத்தும் காய்கறி துருவிகள் அல்லது கத்தி கூர்மையாக இல்லாமல் இருக்கும். அப்போது, நீங்கள் உங்கள் வீடுகளில் இருக்கும்அகல் விளக்கின் மேற்புறத்தை கொண்டு காய்கறி துருவி மற்றும் கத்தி மீது தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் அவை நன்றாக கூர்மையாகி விடும்.