பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை தொப்பை. ஆம், தொப்பை வந்து விட்டால், அதை குறைக்க பெரும் பாடு பட வேண்டும். இதனால் ஒரு சிலர் அதை கண்டுக்கொள்வது இல்லை. ஆனால், இப்படி தொப்பையை குறைக்காமல் விட்டுவிட்டால் நமது உடலில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி, நமது உயிரையே எடுத்து விடும். இதனால், கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடுங்கள். இதற்க்கு நல்ல உடற்பயிற்சி தேவை. ஆனால் உடற்பயிற்சி மட்டும் தொப்பையை குறைத்து விடாது. அதற்க்கு சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில், ஒரு சில உணவுகள் நமது தொப்பையை சீக்கிரம் குறைக்க உதவும். அப்படி, நமது தொப்பையை குறைக்க மிகவும் உதவும் ஒரு காய் தான் கோவக்காய்.
கோவைக்காயை அடிக்கடி சாப்பிடுவதால், சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய் என பல பிரச்சனைகளை குணமாக்கலாம். பலர் இந்த காய்யை எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவார்கள். இதனால் உங்கள் தொப்பை கட்டாயம் குறையாது. அதிகமாகத்தான் செய்யும். இதனால் இந்த கோவக்காயைப் பயன்படுத்தி சுவையான கிரேவி செய்து சாப்பிடுங்கள்.. இதற்க்கு முதலில், ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு, அதில் நறுக்கிய கோவக்காயை சேர்த்து 10 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து விடுங்கள். பின்பு, அதே கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜீரகம், சோம்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
இப்போது அந்த கடாயில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடுங்கள். பின்பு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்பு தக்காளி விழுது சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்த பின்பு, வறுத்த கோவக்காயை சேர்த்து, கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். பிறகு கரம் மசாலா தூள், சர்க்கரை, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், ஆகியவை சேர்த்து கலந்து விட்டால், ஆரோக்கியமான சுவையான கோவைக்காய் குழம்பு தயார்.
Read more: அடிக்கடி வாய்ப்புண் வர இது தான் காரணம்; கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..