fbpx

’பாதாம் சாப்பிடுவது நல்லது தான்’..!! ஆனால் அதன் தோல் விஷமா..? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

நட்ஸ் வகையைச் சார்ந்தது பாதாம் பருப்பு. இதில் கால்சியம் புரதம் ஒமேகா-3 நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து இருக்கின்றன. இது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. எனினும் பாதாம் பருப்பின் தோலில் விஷம் இருப்பதாக சமூக வலைதளங்களில் நிறைய பதிவுகளை காண முடிகிறது. இதன் உண்மை தன்மை என்ன.? பாதாம் பருப்பின் தோளில் உண்மையாகவே விஷம் இருக்கிறதா.? என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாதாமில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நமது இதய நலன் முதல் கூந்தல் ஆரோக்கியம் வரை உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கிறது. இவற்றில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 இதை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதாம் உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க செய்து கெட்ட கொழுப்புகள் ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் முகப்பொலிவிற்கும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணமாக அமைகின்றன.

இவற்றில் இருக்கக்கூடிய கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது. பாதாமில் இருக்கும் இன்றியமையாத மினரல்கள் ஞாபக சக்தியை அதிகப்படுத்தி மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் இயக்கத்திற்கு வலு சேர்கிறது. மேலும் குடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து கிருமித் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.

மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி பாதாமின் தோலில் எந்த வித விஷத்தன்மையும் கிடையாது. மேலும் இவற்றில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. பாதாம் தோல் நார்ச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பிளேவனாய்டு, ஆன்த்ரோசைனின்,பினாலிக் ஆசிட் போன்ற உடலுக்கு நன்மையை தரக்கூடிய ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் பாதாமின் தோல் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்யக்கூடிய பிரீ பயாடிக் தன்மையை கொண்டிருக்கிறது. எனவே, பாதாமை தோலுடன் சாப்பிடுவதால் எந்த தீமைகளும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

Read More : விஜய்க்கு அச்சுறுத்தல்..!! தெரிந்தும் பாதுகாப்பு வழங்காத தமிழ்நாடு அரசு..!! கொந்தளித்த அண்ணாமலை..!!

English Summary

They have stated that there are no harms in eating almonds with their skins.

Chella

Next Post

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்!. 2வது கட்டமாக 116 பயணிகள் இந்தியா வந்தனர்!.

Sun Feb 16 , 2025
Illegal immigration in America!. 116 passengers arrived in India in the 2nd phase!.

You May Like