தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின்கட்டணம் உயரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலைக் குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 %லிருந்து 2.18 % ஆக குறைக்கப்பட்டது.
இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18% உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின்வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது. அதேபோல வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட்இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவற்றுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரைமிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.