போலியான மது விற்பனை கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு வழங்கினார்.
அதாவது, சென்னை கிண்டி ராஜ் பவனின் ஆளுநர் ஆரியன் ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சந்தித்திருக்கிறார். அவருடன் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர்ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று அதிமுகவை சார்ந்தவர்கள் இந்த மனுவை ஆளுநரிடம் வழங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக, சென்னையில் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.