fbpx

தமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா..? இதையெல்லாம் தடுக்க மாட்டீங்களா முதல்வரே..!! – எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

கேரளாவின் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தன. இதற்கு பெரும் கண்டனம் எழுந்த நிலையில் தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலிம் முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார். வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல! கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Read more ; இந்த சிம்பிள் விஷயங்களை செய்தாலே போதும்… உங்களுக்கு பக்கவாதம், இதய நோய்கள் எல்லாம் வரவே வராது…!

English Summary

Edappadi Palaniswami strongly condemned the dumping of Kerala medical waste in Tamil Nadu.

Next Post

அதிர்ச்சி!. கேரளாவில் 2 பேருக்கு குரங்கம்மை பாசிட்டிவ்!. நிலைமை ஆராய குழு அமைத்து உத்தரவு!

Thu Dec 19 , 2024
Monkey pox: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்த 2 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கூடுதலாக தனி வார்டுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார். நிலைமையை பற்றி ஆய்வு செய்வதற்காக அமைச்சர் தலைமையில், மாநில அளவிலான விரைவு பொறுப்பு […]
மீண்டும் தீயாய் பரவும் குரங்கு அம்மை..!! சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

You May Like