கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று நீதிபதிகள், மகாதேவன், சத்யநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மாணவர்கள் எந்த பின்புலத்தையும் பாராமல் திறமை மற்றும் கல்வித்தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவர்களின் முழு செலவையும் அரசே ஏற்பதாக தெரிவித்தனர்..
கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. கல்லூரிகளில் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்துவது, அரசின் உத்தரவை மீறுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.