fbpx

Election | விளவங்கோடு இடைத்தேர்தல்..!! அதிமுக வேட்பாளராக ராணி அறிவிப்பு..!!

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 33 மக்களவை தொகுதிகளில் நேரடியாக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்தார். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவித்தார்.

விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Read More : BREAKING | 1-9ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்.12இல் நிறைவு..!! ஏப்.13 முதல் கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Chella

Next Post

சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! காவல்துறை உயரதிகாரியின் மகள் பெயரில் வந்ததால் பரபரப்பு..!!

Thu Mar 21 , 2024
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு தமிழக காவல்துறை உயர் அதிகாரி மகளின் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பிரபல பல்வேறு பள்ளிகளுக்கு மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகள், பேருந்து நிலையம் என பல இடங்களுக்கு வெடிகுண்டு […]

You May Like