fbpx

Modi: தேர்தல் திருவிழா!… பல்லடத்தில் பிரமாண்டம்!… பிரதமர் மோடியுடன் மேடையேறும் கூட்டணிக்கட்சி தலைவர்கள்!

Modi: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து மாதப்பூரில், மாநாடு நடைபெறும் மைதானத்தில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தாமரை வடிவில் மேடை அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் அளவிலான பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு போலீசார் மைதானம் முழுவதும் தீவிர சோதனையை மேற்கொண்டனர். பார்வையாளர்களுக்கிடையில் பிரதமர் திறந்தவெளி வாகனத்தில் வருவதற்காக தார்த்தளம் அமைக்கும் பணியானதும் நடந்து வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு மைதானம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மேடை ஏறப்போகும் கூட்டணி கட்சித் தலைவர்கள் யார், யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாமகவும் பாஜக அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் ஒன்றிய அமைச்சர் பதவியை பாமக கேட்பதாக கூறப்படுகிறது. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பல்லடம் மேடையில் இடம் பெறுவாரா அல்லது அதிமுகவுடன் கூட்டு சேர்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Readmore: அக்னிபாத் திட்டம் ரத்து..!! மீண்டும் பழைய நடைமுறை..!! காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு..!!

Kokila

Next Post

Wow..! 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் ரூ.48,000 ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு...! முழு விவரம்

Tue Feb 27 , 2024
12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். எப்படி பெறுவது ..? 12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே […]

You May Like