fbpx

சூடுபிடிக்கும் 2024 களம்…! இன்று கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் கூழு கூட்டம்…!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் கூழு கூட்டம் நடைபெற உள்ளது.

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் ஆளும் திமுக அரசு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் மூன்று குழுக்களை அமைத்தது. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய 5 பேர் இடம் பெறுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த குழு வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட குழுவுக்கு அக்கட்சி எம்.பி டி.ஆர்.பாலு தலைமை தாங்குவார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன், மேயர் பிரியா உள்ளிட்ட இளையோர்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர். பழனிவேல் தியகராஜன், கோவி. செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., ஆகிய புதியவர்களுக்கும் இந்த முறை‌ வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் கூழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 10 பேர் தேர்தல் அறிக்கை குழுவில் உள்ளனர். நேற்று தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூடிய நிலையில், தேர்தல் அறிக்கை குழு இன்று கூடுகிறது.

Vignesh

Next Post

மெகா வாய்ப்பு... இந்திய ரயில்வேயில் 5696 காலியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Tue Jan 23 , 2024
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கொங்கன் இரயில்வேயில் Assistant Loco Pilot பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 5696 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு, டிப்ளமோ, IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.19,000 மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி […]

You May Like