fbpx

இனி மின்சார கார்கள்தான்!… உபெர் நிறுவனத்தின் அதிரடி மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

அதிகரித்து வரும் காற்று மாசு போன்ற காரணங்களால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எலக்ட்ரிக் உபெர் (All Electric Uber Green Service) பசுமை சேவையை இந்தியாவில் தொடங்க உள்ளது.

பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் அதனால் அதிகரித்து வரும் போக்குவரத்துக்கு பேருந்து, கார், மற்றும் மோட்டார் சைக்கிள்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பொதுப்போக்குவரத்தான பேருந்துகளில் பயணித்தாலும், பெரும்பாலானோர் சொந்தமாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உபயோகிக்கின்றனர். நவீனமயமாதலின் அடுத்தபடியாக சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், எரிபொருள் உபயோக வாகனங்களிலிருந்து அதனைக் குறைக்கும் விதமாக மின்சார வாகனங்களின் மீது மக்களின் பார்வை விழத்தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு பிரபல கார் டாக்ஸி செயலி நிறுவனமான உபெர் (Uber), இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசு போன்ற காரணங்களால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பசுமை சேவையில் களமிறங்க உள்ளது. இதன்படி எலக்ட்ரிக் உபெர் (All Electric Uber Green Service) பசுமை சேவையை இந்தியாவில் தொடங்க உள்ளது.இதற்காக உபெர் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மின்சார வாகன(EV) தயாரிப்பாளர்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது. மேலும் Uber நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 25,000 மின்சார கார்களை உபெரின் கீழ் கொண்டுவரும் நோக்கில் லித்தியம் அர்பன் டெக்னாலஜிஸ், எவரெஸ்ட் ஃப்ளீட் பிரைவேட் லிமிடெட் மற்றும் மூவ் ஆகிய நிறுவனங்களுடன் தனது கூட்டணியை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உபெர் நிறுவனம் SIDBI வங்கியுடன் இணைந்து மின்சார வாகனங்களில் 1000 கோடி நிதியை முதலீடு செய்கிறது. உபெர் மின்சார வாகனங்களை வேகமாக சார்ஜ் செய்வதற்கு சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கு GMR Green Energy உடன் இணைந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.உபெர் நிறுவனம் இந்தியாவில் உபெர் பசுமை(Uber Green) சேவையை வரும் ஜூன் மாதம் முதல் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் தொடங்குகிறது. Uber Green மூலம் பயனர்களும் எரிபொருள் வாகனங்களை விட மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகில் 15 நாடுகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் பசுமை வாகன பயணங்களுக்கு(Ride) பரவலாகக் கிடைக்கக்கூடிய சேவையாக உபெர் பசுமை(Uber Green) பயனளித்து வருகிறது. உபெர் கிரீன் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நிறுவனம், அதன் பசுமை இலக்கை நோக்கி ஒரு பெரிய படியை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.மார்க்கெட்டுகளின் சந்தையில் இந்தியா Uber-க்கான மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இதனால் இந்தியாவில் Uber மேலும் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளது. உலகளவில், 70 நாடுகள் மற்றும் 10,000 நகரங்களில் Uber சேவை கிடைக்கிறது. உபெர் பசுமையின் இலக்காக 2030 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் மற்றும் 2040 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் பசுமை இயக்க தளமாக(Platform) உபெர் நிலைநிறுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

Kokila

Next Post

5 ரன்கள்! 5 விக்கெட்டுகள்!... மிரட்டலான பந்துவீச்சில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த மும்பை வீரர்!

Fri May 26 , 2023
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் 5 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். 2023 ஐபிஎல் போட்டி தொடரின் எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.இதனை […]

You May Like