fbpx

சட்டென வந்த மின்சார ரயில்..!! பட்டென பாய்ந்த காதல் ஜோடி..!! காதலி தலை துண்டிப்பு..!! காதலன் உயிர் ஊசல்..!!

சென்னை மின்சார ரயில் முன்பு காதல் ஜோடி கட்டிப்பிடித்தபடி பாய்ந்ததில் காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. காதலன் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை கடற்கரையில் இருந்து நேற்றிரவு 8.30 மணி அளவில் தாம்பரம் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது காதல் ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி நிலையில், ரயில் முன்பு குதித்தனர். இதில், இளம் பெண் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலன் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், காதலனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விபத்தில் இருவரின் செல்போன்களும் நொறுங்கி உள்ளதால், காவல்துறையினர் விசாரணையை முடக்கி உள்ளனர். பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் பெயர் இளங்கோ என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் என்றும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

நீ சொன்னா கேக்குற ஆள் இல்ல கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்…..! தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர்….!

Fri Jan 27 , 2023
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறையைத் தவறிய உறவில் யார் இருந்தாலும், அவர்களுக்கு அந்த உறவே எப்போதாவது மிகப் பெரிய ஆபத்தாக வந்து நிற்கும் என்பதை பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம்.இது தொடர்பாக பல்வேறு செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்துள்ள குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கின்ற துரை(30). இவர் அதே பகுதியைச் […]

You May Like