தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது புதிய மின் கட்டணத்தின் படி வீடுகளுக்கான மின்சார கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டதால் மின் கட்டணத்தை செலுத்த இயலாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஆனாலும் மின்சார வாரியத்திற்கு 1,65000 கோடி கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் எதிர்வரும் 5 வருடத்திற்கு ஆண்டுக்கு 6%முதல் 5 வருடங்களில் 30 சதவீதம் வரையில் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது அதற்கான ஒப்புதலையும் வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில், நேற்று உயர் அதிகாரிகளுடன் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் வீட்டு இணைப்புகளுக்கு எந்த விதமான உயர்வும் இல்லை எனவும் வேளாண் இணைப்புகள் குடிசை இணைப்புகள் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் கைத்தறி இசைத்தெரிகள் உள்ளிட்டவருக்கு வழங்கப்படும் இலவசமான மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே ஒரு யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரையில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வீட்டுமின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் எந்த விதத்திலும் உயர்த்தப்படாதது மட்டுமல்லாமல், வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.