fbpx

தூள்…! விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு…! எங்கு சென்று விண்ணப்பிப்பது…? முழு விவரம்

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு, மின்வாரியம் சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நீண்டகாலம் காத்திருக்கும் விவசாயிகள், ‘தட்கல்’ முறையில், முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உங்கள் பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ‘தட்கல்’ முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளும் தற்போது பதிவு செய்யும் விவசாயிகளும், ‘தட்கல்’ முறையில் எளிதாக இலவச மின் இணைப்பு பெறலாம். 5 HP இணைப்புக்கு, 2 லட்சம் ரூபாய்; 7HP முதல் 10 HP வரையில், 3 லட்சம் ரூபாய், 15 HP வரையில் பெற, 4 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி இணைப்பு பெறலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகள் பதிவு செய்யாத விவசாயிகள் ‘தட்கல்’ முறையில் இலவச மின் இணைப்பு பெறலாம். அதற்காக அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.

Vignesh

Next Post

தவறான அக்கவுண்ட்டிற்கு பணத்தை மாற்றி அனுப்பிவிட்டீர்களா?… அப்போ உடனடியாக இதை செய்யுங்கள்!

Tue Aug 22 , 2023
கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளின்போது, தவறான அக்கவுண்ட்டிற்கு பணம் அனுப்பிவிட்டால் உடனடியாக செய்யவேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாட்டில் இப்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதாவது வங்கிக் கிளைகள் அல்லது ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக கால் கடுக்க காத்திருந்து நிற்பதை விட, ஆன்லைன் பேமெண்ட்டுகள் பணம் அனுப்ப எளிதான மாற்றாக மாறிவிட்டன. இருப்பினும், ஆன்லைனில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, […]

You May Like