fbpx

ஒரு கிராமத்தையே ஆபாச படத்திற்கு அடிமையாக்கிய எலான் மஸ்க்..!! பெண்களிடம் ஆக்ரோஷத்தை காட்டும் இளைஞர்கள்..!!

எலான் மஸ்கின் நிறுவனத்தால் முதல்முறையாக இணைய வசதி பெற்ற அமேசான் கிராமத்தினர் இப்போது ஒட்டுமொத்தமாக ஆபாசப் படங்களுக்கு அடிமையாகவிட்டார்களாம்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்டார்லிங்க். சாட்டிலைட் மூலமாகத் தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் சேவையைக் கொண்டு சேர்ப்பதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள். அப்படி தான் தென் அமெரிக்காவின் அடர்ந்த அமேசான் மலைக் காடுகளில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்திற்கு ஸ்டார்லிங்க் இணையச் சேவையை வழங்கி இருக்கிறது. 2,000 பேரை மட்டுமே கொண்ட மாருபோஸ் என்ற பழங்குடியினர், தங்களின் தனி மொழியைத் தான் பேசி வருகிறார்கள். அவர்கள் கலாச்சாரமும் பழமையானது. இவர்கள் முதல்முறையாக ஸ்டார்லிங்க் மூலமாக இணையச் சேவையைப் பெற்றுள்ளனர்.

ஆனால், இந்த இணைய வசதி யாருமே எதிர்பார்க்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அங்குச் சென்ற சர்வதேச செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேசிலில் சேவைகளைத் தொடங்கிய ஸ்டார்லிங்க், அங்கு அமேசான் காடுகளில் வாழும் கிராமங்களுக்கும் இணையச் சேவை வழங்கியுள்ளது. இது தொடக்கத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சிகளுமானதாக இருந்தாலும் கூட இப்போது நேர்மாறான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகப் புலம்புகிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த 73 வயதான சாய்னாமா மருபோ.

அவர் கூறுகையில், “முதலில் எங்களுக்கு இணைய சேவை கிடைத்த போது அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். தொலை தூரத்தில் இருக்கும் எங்கள் உறவினர்களுடன் வீடியோ காலில் பேச முடிந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இணைய வசதி இளைஞர்களைச் சோம்பேறியாக மாற்றிவிட்டது” என்கிறார். இது அவர்களின் கலாச்சாரத்தையும் மொத்தமாக மாற்றிப் போட்டுவிட்டது. இங்குள்ள இளைஞர்கள் இப்போது தங்கள் மொபைல்களுக்கு அடிமையாகிவிட்டனர். 24*7 மொபைல்கள் உடன் தான் இருக்கிறார்களாம். குறிப்பாக ஆபாசப் படங்களுக்கு அவர்கள் அடிமையாகவிட்டதாக அந்த கிராமத்தில் உள்ள மூத்த குடிமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாருபோ சங்கத்தின் தலைவரான ஆல்ஃபிரடோ மருபோ கூறுகையில், “பலரும் இப்போது ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிவிட்டனர். இளைஞர்கள் க்ரூப் சாட்களில் ஓபனாகவே ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆபாச வீடியோக்களால் இளைஞர்கள் பெண்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும் எங்கள் காதுகளுக்குச் செய்திகள் வந்துள்ளன” என்றார். அதேநேரம் ஆபாசப் படங்களால் கெடுதல்கள் மட்டுமே நடந்துள்ளது என்று இல்லை. அந்த கிராமத்தில் பல குழந்தைகள் இணையம் வழியாகப் படிக்கத் தொடங்கியுள்ளனர். பாம்புக் கடி போன்ற ஆபத்தான சூழல்களில் அவர்களால் உடனடியாக மருத்துவர்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது. மேலும், அங்குள்ள கிராம மக்களால் பல புதுப்புது விஷயங்களை கற்கவும் முடிகிறதாம். எனவே, இணையம் என்பது கெடுதல் மட்டும் இல்லை. எல்லா விஷயங்களைப் போலவே இணையத்திலும் கெட்ட விஷயங்களும் இருக்கிறது. நல்ல விஷயங்களும் உள்ளன. அதில் நாம் எதை எடுத்துக் கொள்கிறோம் என்பதே முக்கியமாகும்.

Read More : பாஜக தேசிய தலைவருக்கே ஆப்பு..!! பதவி பறிபோகிறது..!! ஜேபி நட்டாவுக்கு மாற்று இவரா..? வெளியாகிறது அறிவிப்பு..!!

English Summary

Amazon villagers who were first given internet access by Elon Musk’s company are now en masse addicted to pornography.

Chella

Next Post

IIT Madras-இல் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.1,50,000..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Thu Jun 6 , 2024
IIT Madras has published an employment notification to fill the vacancies for the post of Lead.

You May Like