Grok: எலோன் மஸ்க்-க்கு சொந்தமான எக்ஸ் நிறுவனத்திடம், அதன் AI சாட்போட்டான க்ரோக் (Grok) வழங்கிய பதில்களின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எலான் மஸ்க்கின் சமீபத்திய AI மறு செய்கையான Grok 3, கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. xAI ஆல் உருவாக்கப்பட்ட AI சாட்பாட், க்ரோக், ஒரு நிமிடத்திற்குள் மீம்ஸ்களை உருவாக்க முடியும் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிப்படுத்தியிருந்தார். புதிய மாடல் அதன் முன்னோடியான Grok 2 ஐ விட 10 மடங்கு அதிக திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மற்ற AI மாதிரிகள் வெட்கப்படக்கூடிய தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும்போது “இயற்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய உரையாடல்களை” செயல்படுத்துவதை Grok நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சாட்பாட் ChatGPT, Meta AI மற்றும் Google Gemini ஆகியவற்றை விட சிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், எக்ஸ் AI சாட்போட்டான க்ரோக் (Grok) வழங்கிய பதில்களின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு உள்ளதாக CNBC-TV18 செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், க்ரோக்கிற்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு மத்திய அரசு X நிறுவனத்திடம் கேட்டுள்ளது. இந்த விசாரணை க்ரோக்கின் பதில்கள் சர்ச்சைக்கிடமானதா? அல்லது தவறான தகவல்களை வழங்குகிறதா? என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. X நிறுவனம் இதற்குப் பதில் அளிக்குமா? என்பதற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்தின் பதிலுக்காக மத்திய அரசு காத்திருப்பதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், X நிறுவனத்தின் Grok ஏஐ (AI) சாட்போட் அதன் நேர்மையான பதில்களுக்கு இணையத்தில் வைரலாகியுள்ளது. அரசியல் விமர்சனங்களிலும் விவாதங்களிலும், இரு தரப்பினரும் Grok-ஐ ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தி வருவது கவலை அளிக்கிறது.