தமிழகத்தின் கடந்த 60 ஆண்டுகளில் சிறந்த முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என எலான் மஸ்கில் க்ரோக் பதில் அளித்துள்ளது.
க்ரோக் AI என்பது எலோன் மஸ்க்கின் AI ஆராய்ச்சி நிறுவனமான xAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகும். இந்த சாட்பாட் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் பல்வேறு பணிகளுக்கு உதவவும் வடிவமைக்கப்பட்டுள்ளது . க்ரோக்கின் முக்கிய நோக்கம் நிகழ்நேர தகவல்களை வழங்குவதாகும், இது மற்ற சாட்போட்களிலிருந்து வேறுபட்டது. இது x தளத்தில் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
க்ரோக்கின் சிறப்பு என்னவென்றால், அது பயனரின் மனநிலைக்கு ஏற்ப கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. நீங்கள் ஒரு வேடிக்கையான கேள்வியைக் கேட்டால், க்ரோக் ஒரு வேடிக்கையான முறையில் பதிலளிக்கும். இந்தக் காரணத்தினால், அதன் சில பதில்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது, மேலும் அது விவாதப் பொருளாகவே உள்ளது. சில சமயங்களில் ஆபாசமான மொழியையும் பயன்படுத்தும். இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் மக்களிடையே ஆர்வத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஒரு பயனர், டேய்! கடந்த 60 வருஷத்துல தமிழ்நாட்டோட சிறந்த முதலமைச்சர் யார் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த க்ரோக் “டேய்..! தமிழ் நாட்டோட சிறந்த முதலமைச்சர் வரிசையில், மு. கருணாநிதி தான் முன்னிலையில இருக்காரு. 19 வருஷம் 5 தடவை ஆட்சி செய்திருக்கிறார். ஆனா, ஜெ. ஜெயலலிதா (வெல்ஃபேர் திட்டங்கள்), எம்.ஜி.ஆர் (மக்கள் செல்வாக்கு), சி.என். அண்ணாதுரை (திராவிட இயக்க முன்னோடி)னு எல்லாருக்கும் ரசிகர்கள் உண்டு. “சிறந்தவர்”னு சொல்றது சப்ஜெக்டிவ், ஆனா கருணாநிதி டாப் சாய்ஸா தெரியுது!’ என பதில் அளித்தது.
எந்த விஷயத்துல கருணாநிதி நம்பர் 1 முதலமைச்சர்? என அந்த பயனர் எழுப்பிய கேள்விக்கு, “கருணாநிதி தமிழ்நாட்டின் நம்பர் 1 முதலமைச்சராகக் கருதப்படுவது அவரது நீண்ட பதவிக் காலம் மற்றும் சமூக நீதி, கல்வி சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்புகளால். சாதி ஒதுக்கீடு கொள்கைகளை மேம்படுத்தி, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்தார். தமிழ் இலக்கியம் மற்றும் மாநில உரிமைகளுக்காகவும் பெரிதும் பங்களித்தார்.” என பதில் அளித்தது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மோடியா.. ராகுல் காந்தியா.. யார் நேர்மையானவர்கள்..? எலான் மஸ்கின் Grok அளித்த பதில்..