கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று மாலை ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்மாற்றியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும், ஜெனரேட்டரின் வயரிங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையின் நான்கு மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால், …