fbpx

அவசரநிலை பிரகடனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு..! இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுச் சொத்துக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த ஜூலை 19ஆம் தேதி அறிவித்தார்.

அவசரநிலை பிரகடனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு..! இலங்கை அரசு அறிவிப்பு

அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

Thu Jul 28 , 2022
சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கச் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர மேயா் பிரியா ராஜன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, […]
2024 நாடாளுமன்றத் தேர்தல்..!! தமிழகத்தில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி..? எந்த தொகுதியில் தெரியுமா..?

You May Like