fbpx

JOB | மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் உள்ளே!!

திருப்பூர் மாவட்டத்தில் ஆயுஷ் மற்றும் தேசிய சுகாதார மிஷன் கீழ் இயங்கும் பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, ஆயுஷ் மருத்துவமனை போன்ற இடங்களில் காலியாக உள்ள பல்வேறு மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

பணியிட விபரங்கள்

பல் அறுவை சிகிச்சை நிபுணர்

சம்பளம்: மாதம் ரூ.34000/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: BDS முடித்திருக்க வேண்டும்.

பல் உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.13800/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவிய அனுபவம்.

டிரைவர்

சம்பளம்: மாதம் ரூ.13500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. 8வது தேர்ச்சி.
2. செல்லுபடியாகும் கனரக மோட்டார் வாகன உரிமம் (HMV).
3. குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.


MPHW (F)/ Auxiliary Nurse Midwives / Urban Health Nurse

சம்பளம்: மாதம் ரூ.14000/-
காலியிடங்கள்: 09
கல்வி தகுதி: SSLC படிப்புடன் 18 மாத ANM/MPHW பயிற்சி பெற்றிடுக்க வேண்டும்.

+2 க்குப் பிறகு துணை செவிலியர் மருத்துவச்சி/பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (பெண்) தகுதி பெற்றவர்களுக்கு, 2 வருட துணை செவிலியர் மருத்துவச்சி/பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மருந்தாளர்

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15000/-
கல்வி தகுதி: 12th + D.Pharm/ B.Pharm

Audiologist (Audiologist & Speech Language Pathologist)

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.23000/-
கல்வி தகுதி: A Bachelor in Audiology & Speech Language Pathology/B.Sc (பேச்சு மற்றும் கேட்டல்).

ஆடியோமெட்ரிஷியன் / ஆடியோமெட்ரிக் உதவியாளர்

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.17250/-
கல்வி தகுதி: கேட்டல், மொழி மற்றும் பேச்சு (DHLS) ஆகியவற்றில் 1 வருட டிப்ளமோ.

ஆயுஷ் டாக்டர் (சித்தா)

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.40000/-
கல்வி தகுதி: BSMS

Dispenser (Siddha)

சம்பளம்: மாதம் ரூ.15000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: பார்மசியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

பல்நோக்கு பணியாளர்

காலியிடங்கள்: 07
சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.300/-
கல்வி தகுதி: 8வது தேர்ச்சி

சிகிச்சை உதவியாளர் (ஆண்)

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15000/-
கல்வி தகுதி: நர்சிங் தெரபியில் டிப்ளமோ.

ஆயுஷ் டாக்டர் (சித்தா)

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.40000/-
கல்வி தகுதி: BSMS

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

அனுப்பவேண்டிய முகவரி:நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுலவர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
147-பூலுவபட்டி பிரிவு,
நெருப்பெரிச்சல் சாலை,
திருப்பூர்-641 602
தொலைபேசி எண்: 0421 2478503

Read more ; பாஜக-வில் இணைகிறாரா நடிகை மீனா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

English Summary

Employment in District Welfare Society… Who can apply?

Next Post

குட் நியூஸ்...! அரசு பள்ளி 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌...! அரசு உத்தரவு

Sun Jul 28 , 2024
Government school students will be given a confirmation certificate to get 7.5% reservation in medical and engineering courses.

You May Like