fbpx

அபராதம் இல்லாத மின்சார கட்டணம்.! அரசின் புதிய அறிக்கையால் தொழில் முனைவோர் நிம்மதி.!

மின்சாரக் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு தொழில்துறைக்கும் பொருந்தும் என மின்சார அமைச்சர் புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இது தொழில் முனைவோரிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இந்தப் புயலின் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர். இன்னும் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இந்நிலையில் புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு அபராதம் இல்லாமல் மின்சார கட்டணத்தை செலுத்தும் தேதி 07.12.2023 இருந்து 18.12.2023 தேதியாக கால நீட்டிப்பு செய்யப்பட்டு அறிக்கையை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த கால நீட்டிப் அவகாசம் தொடர்பான புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் மின்சாரம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்த புதிய அறிவிப்பின்படி மின்சார கட்டணம் செலுத்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் சிறு தொழில் முனைவோர் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த புதிய அரசு அறிக்கை முதல்வரின் அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இந்த புதிய கால அவகாசம் நீட்டிப்பு அறிவிப்பால் பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Post

பட்டப் பகலில் மிளகாய் பொடி தூவி.! 20 வயது இளைஞர் படுகொலை.! வெளியான வீடியோவால் பரபரப்பு.! காவல்துறை வலைவீச்சு.!

Sun Dec 10 , 2023
பட்டப் பகலில் பரபரப்பான வீதியில் இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பீகாரின் நவதா மாவட்டத்தில் பரபரப்பான சாலையில் 20 வயது இளைஞர் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது முகத்தில் மிளகாய் […]

You May Like