fbpx

குட் நியூஸ்…! வருகிறது EPFO 3.0 நடைமுறை… இனி ATM-ல் பணத்தை ஈசியாக எடுத்துக் கொள்ளலாம்…!

நாடு முழுவதும் இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய அமைப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் எண்ணிக்கை கொண்டுள்ளது. முந்தைய அக்டோபர் 2024 மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிகர உறுப்பினர் சேர்க்கை 9.07% அதிகரித்துள்ளது. மேலும், ஆண்டுக்கு ஆண்டு முறையில் நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது நிகர உறுப்பினர் சேர்க்கைகளில் 4.88% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நவம்பர் 2024-ல் இபிஎஃப்ஓ-வில் சுமார் 8.74 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். புதிய உறுப்பினர்களின் சேர்க்கை அதற்கு முந்தைய அக்டோபர் 2024 மாதத்துடன் ஒப்பிடும்போது 16.58% அதிகமாகும். மேலும், ஆண்டுகளுக்கு ஆண்டு பகுப்பாய்வின்படி முந்தைய ஆண்டு இதே மாதத்தை விட(நவம்பர் 2023)புதிய உறுப்பினர் சேர்க்கை 18.80% அதிகமாகும்.

இந்த எழுச்சிக்கு வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள், பணியாளர் நலன்கள் குறித்த விழிப்புணர்வு, பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்போது நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் சமீபத்திலும் இபிஎஃப்ஓ தனது செயல்முறைகளில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இதன் கீழ், இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இபிஎஃப்ஓ 3.0 இன் கீழ் கிடைக்கும் வசதிகள் மற்றும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் என்ன என்று பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ 3.0 இன் கீழ் ஒரு புதிய மொபைல் செயலி தொடங்கப்படும். இந்த செயலியின் மூலம், இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் இபிஎஃப் கணக்கு இருப்பை (EPF Account Balance) எளிதாக செக் செய்யலாம். கூடுதலாக, பிஎஃப் பணத்தை க்ளெய்ம் செய்வதும் மிகவும் எளிதாகிவிடும். தற்போது, PF கணக்கிலிருந்து பணத்தை கோருவதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். இது சிக்கலானதாக இருக்கலாம். இருப்பினும், புதிய செயலியின் மூலம், ஊழியர்கள் எளிதாக பணத்தை க்ளெய்ம் செய்ய முடியும்.

வரம்பு நிர்ணயம் :

இபிஎஃப்ஓ 3.0 இன் கீழ், ஊழியர்கள் தங்கள் PF கணக்குகளிலிருந்து பணம் எடுக்க ஒரு புதிய வசதியையும் பெறுவார்கள். அவர்களுக்கு ATM அட்டையைப் போன்ற ஒரு அட்டை வழங்கப்படும். இதை பயன்படுத்தி அருகிலுள்ள ATM இலிருந்து எளிதாக பணம் எடுக்க முடியும். இருப்பினும், பணம் எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்படும்.

English Summary

EPFO 3.0 process is coming… Now you can easily withdraw money from ATMs.

Vignesh

Next Post

பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு!. இந்தியாவுடனான உறவு முதல் உக்ரைன் போர் வரை!. என்ன பேசினார்கள் தெரியுமா?.

Tue Jan 28 , 2025
PM Modi - Donald Trump talk on the phone!. From relations with India to the Ukraine war!. Do you know what they talked about?. Here are the full details!

You May Like