fbpx

EPFO மகிழ்ச்சி செய்தி… வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு… விரைவில் வங்கி கணக்கில் பணம் கிரெடிட்…

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அறிவித்தது. EPFO ஆனது 2023-24 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதத்தை முந்தைய ஆண்டின் 8.15% லிருந்து 8.25% ஆக உயர்த்தியுள்ளது. EPFO அதிகாரப்பூர்வ இணையதளம், மிஸ்ட் கால் அழைப்புகள், SMS அல்லது உமாங் ஆப் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் தங்கள் EPF இருப்பைச் சரிபார்க்கலாம்.

தங்கள் பாஸ்புக்கை சோதனை செய்வதன் மூலம், உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகள், சம்பாதித்த வட்டி மற்றும் ஒட்டுமொத்த EPF இருப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும். பெரும்பாலும் ஜூலை மாதத்திற்குள் உங்கள் பிஎப் கணக்கில் அதற்கான வட்டி வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் ஊழியர்களுக்கு விரைவில் இதற்கான செய்தி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பி.எப்., அட்வான்ஸ் விண்ணப்பித்த 3 நாளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி.எப்., தொகையிலிருந்து அட்வான்ஸ் பெற முடியும். இதற்கான முறை தானியங்கி நடைமுறையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் பி.எப்., பணம் கிடைக்கும்‌. ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.

மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ‌.

English Summary

EPFO Good news… Interest rate hiked to 8.25%

Vignesh

Next Post

Breaking: கனமழை காரணமாக கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

Wed Jun 26 , 2024
Due to heavy rain, schools are closed in Valparai, Coimbatore

You May Like