ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்ததது.. மொத்தம் 96 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்..
இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆகியோரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.. இதே போல் தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.. அதே போல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது..
தேர்தல் வாபஸ் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் மனு நிராகரிக்கப்பட்டது.. அவரின் வேட்புமனுவுக்கு முன்மொழிவு இல்லாததால், மனு நிராகரிக்கப்பட்டது.. தொடர்ந்து வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது..