fbpx

பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க முடிவு…! நாடு முழுவதும் விரைவில் சேகரிப்பு நிலையங்கள்….!

பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளது.

எரிபொருள் தேவைக்கு ஏற்ப பெட்ரோலில் 10 சதவீதம் அளவுக்கு எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தேவைக்கு ஏற்ப எத்தனால் சேமிப்பு நிலையங்களை அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு முனையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து எத்தனாலை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எத்தனால் விநியோக ஆண்டான 2021-22-ம் ஆண்டில் பெட்ரோலுடன் சராசரியாக பத்து சதவீத எத்தனாலைக் கலக்கும் பணிகளில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் வெற்றி கண்டுள்ளன. அதே நேரத்தில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனாலைக் கலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

Vignesh

Next Post

மக்களுக்கு குட் நியூஸ்.. இனி இதுவும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்..!

Tue Dec 20 , 2022
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகலீல் செறிவூட்டப்பட்ட அரிசி கிடைக்கும் என கூறினார். மேலும் பேசிய அவர், […]

You May Like