fbpx

யூரோ 2024!. நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி!. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ‘ரவுண்டு-16’ போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியை வீழ்த்தி சுவிட்சர்லாந்தும், மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியும் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஜெர்மனியில் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (‘யூரோ’ கோப்பை) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிந்த நிலையில் நேற்று ‘ரவுண்டு-16’ சுற்று ஆரம்பமானது. பெர்லினில் நடந்த ‘ரவுண்டு-16’ போட்டியில் உலகின் ‘நம்பர்-10’ இத்தாலி அணி, 19வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 37 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரூபன் வர்காஸ் ‘பாஸ்’ செய்த பந்தில் ரெமோ புரூலர் ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து போராடிய ‘நடப்பு சாம்பியன்’ இத்தாலி அணியின் ஜியோவானி லாரன்சோ, ஸ்டீபன் எல் ஷாராவி, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தனர். முதல் பாதி முடிவில் சுவிட்சர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. இரண்டாவது பாதியின் 46வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரூபன் வர்காஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ‘நடப்பு சாம்பியன்’ இத்தாலி பரிதாபமாக வெளியேறியது.

இதேபோல், ‘ரவுண்டு-16’ சுற்று போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி, டென்மார்க் அணிகள் மோதின. முன்னதாக போட்டியின்போது முதல் பாதியில் 35 வது நிமிடத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 20 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது பாதியில் கை ஹாவர்ட்ஸ் மற்றும் ஜமால் முசியாலா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 2-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி போட்டியில் ஜெர்மனி ஸ்பெயின் அல்லது ஜார்ஜியாவுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: இந்திய அணி சாம்பியன்!. முறியடிக்க முடியாத சாதனை!. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து!

English Summary

Euro 2024!. Shocking failure of the current champion! Switzerland and Germany advance to the quarter-finals!

Kokila

Next Post

பரபரப்பு...! கடலூரில் அதிமுக மாவட்ட நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை...!

Sun Jun 30 , 2024
AIADMK district executive hacked to death by mysterious persons in Cuddalore

You May Like