fbpx

’உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா’..? போலீசாரின் பதிலை கேட்டு ஆடிப்போன நீதிமன்றம்..!!

பறிமுதல் செய்து வைத்திருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் திண்றுவிட்டதாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாடு முழுவதும் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருவதால், அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2018- 2019ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் மதுரா காவல்துறையினர் சுமார் 581 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதனை கடத்தி வந்த கடத்தல்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

’உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா’..? போலீசாரின் பதிலை கேட்டு ஆடிப்போன நீதிமன்றம்..!!

இந்நிலையில், தற்போது இதன் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் கடத்தி வந்த கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் மதுரா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏனெனில் அப்போது தான் அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும். நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, காவல்துறையினர் கஞ்சாவின் சில மாதிரிகளை (Samples) மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆனால் இதனை ஏற்காத நீதிமன்றம், குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த கஞ்சாவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கறாராக கூறியது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதுரா காவல்துறை தரப்பில் இருந்து விநோதனமான பதில் வந்துள்ளது. இதனை கேட்ட நீதிமன்றம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

’உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா’..? போலீசாரின் பதிலை கேட்டு ஆடிப்போன நீதிமன்றம்..!!

அதாவது, காவல் நிலைய ஸ்டோர் ரூமில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் தான் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவையும் தின்றுவிட்டதாகவும், எனவே தான், பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த கஞ்சாக்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை என விளக்கமளித்தது. மதுரா காவல்துறையின் விநோத விளக்கத்தை கேட்ட நீதிமன்றம் ஆடிப்போய் விட்டது.

Chella

Next Post

திருமணமான மூன்றே நாளில்..!! ரஜினி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்..!! 18 வருஷம் ஆச்சு இன்னும் வரல..!!

Thu Nov 24 , 2022
சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு வெளியில் பெண் கிடைப்பது மிகக் கடினம் என்ற பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். ஒரு ஆணுக்கே இப்படி என்றால், ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள பல நிபந்தனைகள் விதிக்கப்படும். அதுவும் அந்த நடிகை கிளாமர் ரோலில் நடித்தால் அவ்வளவுதான். அப்படி ரஜினி பட நடிகை ஒருவர் சினிமாவால் தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டியில் கூறி இருந்தார். ’தலைவாசல்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை […]
திருமணமான மூன்றே நாளில்..!! ரஜினி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்..!! 18 வருஷம் ஆச்சு இன்னும் வரல..!!

You May Like