fbpx

’பிரதமர் மோடி கூட திராவிடர் தான்’..! பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பரபரப்பு பேச்சு..!

”நமது நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சென்னை 134-வது வார்டில் வசிக்கும் மக்களின் சேவைக்காக உருவாக்கியுள்ள உங்கள் மாம்பலம் ஆப் (UMA) எனும் செயலியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ”முதல்முதலில் 2004ஆம் ஆண்டு நான் உமா ஆனந்தனை சந்தித்தது ஒரு போராட்ட களத்தில் தான். 18 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து அவர் மக்கள் பணி செய்து வருகிறார். தேசத்தின் உடைய கலாச்சாரம் பண்பாடு மாறாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதற்காக கேந்திரமாக இருப்பது நம்மளுடைய கோவில்கள் தான். நம் கோவில்கள் இல்லை என்றால் இன்று இந்து மதம் இல்லை, சனாதான தர்மம் இல்லை. இன்றைக்கு ஒரு சரியான விஷயத்தை ஆளுநர் பேசினால் சர்ச்சை ஆகிறது.

’பிரதமர் மோடி கூட திராவிடர் தான்’..! பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பரபரப்பு பேச்சு..!

இந்தியாவில் திராவிடம் என்பது இல்லை, பஞ்ச திராவிடம் தான் இருந்தது. இந்த நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான். இந்தப் பகுதியில் பாஜகவை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றதாலே அயோத்தியா மண்டபத்தை அரசாங்கம் எடுக்கிறது. அடுத்த மாநகராட்சி தேர்தல் வரும் போது சென்னை மாநகராட்சி மேயர் பாஜகவை சார்ந்தவராக இருக்க வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

சிங்கப்பூர் ஓபன் மகளிர் பேட்மிண்டன்..! இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேற்றம்..!

Wed Jul 13 , 2022
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் சிறப்பாக விளையாடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில், இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், கஷ்யப், சமீர் வெர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இன்று காலை […]

You May Like