கர்ப்பம் அல்லது பிரசவ சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இறக்கிறார் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகளில் கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.. குறிப்பாக 20 வருடத்தில் ஒட்டுமொத்த தாய் இறப்பு விகிதம் 34.3 சதவீதம் குறைந்துள்ளது.. 2000 ஆம் ஆண்டில் 100,000 குழந்தை பிறப்புகளில் 339 மகப்பேறு இறப்புகளாக இருந்தது.. அது 2020 ஆம் ஆண்டில் 223 மகப்பேறு இறப்புகளாக குறைந்துள்ளது.. ஆனாலும் கூட, 2020ல் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 800 பெண்கள் இறந்தனர், அல்லது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழக்கும் நிலை இருந்தது..
உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து பேசிய போது ” கர்ப்பம் என்பது பெண்களுக்கும் ஒரு நேர்மறையான அனுபவமாகவும் இருக்க வேண்டும் என்றாலும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியூட்டும் ஆபத்தான அனுபவமாக உள்ளது.. இந்தப் புதிய புள்ளிவிவரங்கள், ஒவ்வொரு பெண்ணும் முக்கியமான சுகாதாரச் சேவைகளை அணுகுவதை உறுதிப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை வெளிப்படுத்துகின்றன… மேலும் அவர்கள் தங்கள் இனப்பெருக்க உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.” என்று தெரிவித்தார்..
மகப்பேறு இறப்புகள் பெரும்பாலும் உலகின் ஏழ்மையான பகுதிகளிலும், போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் அதிகரித்துள்ளன என்று ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2020 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 70 சதவீதம் ஆப்பிரிக்காவில் பதிவானது என்றும், அங்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை விட இறப்பு விகிதம் “136 மடங்கு அதிகம்..
ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் மகப்பேறு இறப்பு விகிதங்கள் உலக சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்..” என்றும் தெரிவிக்கப்படுட்டுள்ளது..
மேலும் அந்த அறிக்கையில் “ கடுமையான இரத்தப்போக்கு, நோய்த்தொற்றுகள், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற அடிப்படை நிலைமைகள் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.. பெண்கள் தங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது முக்கியமானது.. குறிப்பாக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது, அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, குழந்தை பிறப்பைத் திட்டமிடலாம்..” என்றும் கூறப்பட்டுள்ளது..