fbpx

அதிரடி.‌‌.! ஆறு மாதங்களுக்கு ஒருமுறை.‌.. மத்திய அரசு அறிமுகம் செய்த மதிப்பீட்டு முறை…

தனியார் நிறுவனங்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டு முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது..

தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகஉம், பொறுப்புணர்வை அதிகரிக்கவும் விரிவான தர வரிசை முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களை மதிப்பீடு செய்ய விரிவான வழிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வகுத்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் தர வரிசை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

நடைபாதை நிலை குறியீட்டெண், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒன் செயலியில் உள்ள குறைபாடு திருத்த இணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டு முறை இருக்கும். இதில் 95 க்கும் அதிகமான குறைபாடுகள் அறிவிக்கப்படலாம், டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படலாம். இது மதிப்பீட்டின் ஒரு பகுதியாக அமையும். நடைபாதை நிலை குறியீட்டெண்ணுக்கு 80 சதவீத முக்கியத்துவமும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒன் செயலி இணக்கத்திற்கு 20 சதவீதமும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கடினத்தன்மை, பள்ளங்கள், விரிசல், ஒட்டு வேலை உள்ளிட்ட ஆறு செயல்பாட்டு அளவுருக்களின் அடிப்படையில் நடைபாதை நிலை குறியீட்டெண் கணக்கிடப்படும். நூற்றுக்கு 70-க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற ஒப்பந்ததாரர்கள் ‘செயல்படாதவர்கள்’ என்று அறிவிக்கப்படுவார்கள், இதனால் அதன் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்படும் வரை புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களைப் பெற இவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர்.

மதிப்பீட்டிற்கு வெளிப்படையான கட்டமைப்பை நிறுவுவதன் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளின் தரமான கட்டுமானம் மற்றும் மேலாண்மையில் புதிய வரையறைகளை அமைப்பதையும், தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு பாதுகாப்பான, மென்மையான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English Summary

Every six months… the evaluation system introduced by the central government

Vignesh

Next Post

வீட்டில் புறா கூடு கட்டினால் அதிர்ஷ்டமா..? துரதிர்ஷ்டமா..? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது..?

Mon Dec 9 , 2024
It is also widely believed that having a dovecote in the house brings bad luck. But is that true?

You May Like