92வது இந்திய விமானப்படையின் ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் இந்த நிகழ்ச்சியை காண பல லட்ச மக்கள் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், விமான சாகச நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களிடம் ஏற்கனவே வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை, தண்ணீர், தொப்பி, கண்ணாடி போன்றவற்றை கொண்டு வர வேண்டும் என்று இந்தியா விமானப்படை அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது “ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட படுக்கைக்களையும், ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் தயார் நிலையில் வைத்திருந்தோம். 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். விமான சாகச நிகழ்ச்சி நடந்த வேலை என்பதுக்கு பகல் 11 மணி முதல் 1 மணி வரை. அந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. அதற்காக தான், இந்த நிகழ்ச்சியை காண வரும் பொது மக்கள் குடை, தண்ணீர், தொப்பி, கண்ணாடி போன்றவற்றை கொண்டு வர வேண்டும் என்று இந்தியா விமானப்படை ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவைக்கையாக சொல்லியிருந்தது.
எதோ நீங்க எல்லோரும் வாங்க, வெயிலே இருக்காது, காஞ்சிப்போன வானமே இருக்கும், ஒண்ணுமே இருக்காதுனு யாரையும் கூப்பிடலை. இந்திய விமானப்படை ஆரம்பத்திலையே இதுகுறித்து தெளிவாக சொல்லியிருந்தார்கள். இது ஒரு தேசிய விழா, வெளியுலகிற்கு இந்திய விமானப்படையின் கட்டமைப்பை தெரிவிப்பது.நேற்றைக்கு தஞ்சையில் இருந்து 20 நிமிடத்தில் சென்னைக்கு ரபேல் விமானம் சீறிப்பாய்ந்தது. இத்தகைய ஆற்றல் உள்ள விமானங்கள் இந்தியாவில் இருப்பது என்பதை உலகிற்கு உணர்த்துகிற வகையில் நடந்த அற்புதமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் போது 5 பேர் இறந்தது என்பது உண்மையில் வருத்தமான ஒன்று தான். இது எதுவும் எதிர்பார்த்து நடந்தது இல்லை, இதற்கு அனைவரும் வருத்தம் தெரிவிக்கிறோம். இதை யாரும் அரசியல் பண்ணக்கூடாது. அப்படி அரசியல் செய்தால் தோல்வி அடைவார்கள். இந்த 5 பேரின் மரணங்கள் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டது. இவர்கள் இறந்த பிறகு தான் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி யாரும் இறந்து போகவில்லை.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்டவர்கள் 43 பேர், அதில் op 40 பேர், ஒருவர் இறந்துவிட்டார், இருவர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 49 பேர் அனுமதிக்கப்பட்டார்கள், அதில் op 46 பேர், இருவர் இறந்துவிட்டனர். ராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டார்கள் அதில் op 7 பேர், இருவர் இறந்துவிட்டனர், இருவர் உள்நோயாளிகளாக உள்ளனர். மேலும் வெயில் காரணமாக பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 102, இதில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றவர்கள் 93 பேர், இறந்தவர்களின் எண்ணிக்கை 5. இப்போது மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 7 பேர். இந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது அரசு சார்பில் தேவையான குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலால் யாரும் இறந்து போகவில்லை. இறந்தவர்கள் அனைவரும் வெயிலின் தாக்கம் காரணமாக இறந்துள்ளனர்.” என்று கூறினார்.
Read More: மெரினாவில் வான் சாகசம்.. திமுக அரசிற்கு மக்களின் மீது அக்கறை இல்லை..!! – விசிக ஆதவ் அர்ஜுனா கண்டனம்