fbpx

பரபரப்பு..!! நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி..!! நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் அவசர ஆலோசனை..!!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. விஜய், அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

’ஒரு மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்கப்படும்’..!! நிர்வாகிகளிடம் உறுதியளித்த நடிகர் விஜய்..!!

Thu Jan 25 , 2024
இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. திமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கூட்டணியை தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா? என அரசியல் பார்வையாளர்கள் இடையே விவாதங்கள் ஒருபுறம் அரங்கேறி […]

You May Like