பொறியியல் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.