fbpx

நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு..! ஈபிஎஃப் சட்டத்தின் பிரிவு 17-ன் கீழ் விலக்குப் பெற வேண்டும்…!

ஊழியர்களின் பிஎஃப் கார்பஸை நிர்வகிக்க விரும்பும் நிறுவனங்கள் ஈபிஎஃப் சட்டத்தின் பிரிவு 17-ன் கீழ் விலக்குப் பெற வேண்டும்.

இது குறித்து இபிஎஃப்ஒ வெளியிட்ட அறிக்கையில்; கடந்த இரண்டு ஆண்டுகளில், 27 நிறுவனங்கள் இபிஎஃப்ஒ நடைமுறைகள் தொடர்பாக விலக்குப் பெற்றதை திரும்ப ஒப்படைத்துள்ளன. இதனால் 30,000 ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் ரூ. 1688.82 கோடி நிதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட சேவைகள் காரணமாக, அதிகமான நிறுவனங்கள் இபிஎஃப்ஒ வழங்கிய விலக்குகளை சரண்டர் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (PF) நேரடியாக நிர்வகிக்க இபிஎஃஒ அனுமதிக்க விரும்புகின்றன. இது அவர்களின் முக்கிய வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

விரைவான உரிமை கோரல் தீர்வு, அதிக வருவாய் விகிதங்கள், வலுவான கண்காணிப்பு, செயல்முறைகளில் எளிமை ஆகியவற்றுடன், இபிஎஃஒ-வால் நிறுவனங்களுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இபிஎஃஒ, இபிஎஃப் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான இணக்க நடைமுறைகளை நெறிப்படுத்த கடந்த ஆண்டில் பல நடவடிக்கைகளை எடுத்தது.

நடைமுறைகளை தரப்படுத்துவதற்கான முயற்சியில், இபிஎஃஒ, முதல் முறையாக, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தொடர்புடைய அனைத்து நடைமுறைகளையும் உள்ளடக்கிய விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் கையேடுகளையும் வெளியிட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, விலக்குகளை ஒப்படைக்கும் செயல்முறையை எளிதாக்க ஒரு புதிய மென்பொருளும் தளமும் விரைவில் தொடங்கப்படும்.

தங்கள் ஊழியர்களின் பிஎஃப் கார்பஸை நிர்வகிக்க விரும்பும் நிறுவனங்கள் ஈபிஎஃப் சட்டத்தின் பிரிவு 17-ன் கீழ் விலக்குப் பெற வேண்டும். அத்தகைய விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் சந்தாதாரர்களுக்கு ஈபிஎஃப்ஒ வழங்கிய நன்மைகளுக்கு இணையான நன்மைகளை வழங்கவும், சட்டத்தில் உள்ளபடி விலக்குக்காக அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கவும் சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. 31 மார்ச் 2023 நிலவரப்படி, 31,20,323 உறுப்பினர்களின் ரூ.3,52,000 கோடி கார்பஸை நிர்வகிக்கும் 1002 விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களாக உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English Summary

Exemption under Section 17 of the EPF Act

Vignesh

Next Post

எஸ்டோனியா பிரதமர் ராஜினாமா!. ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கொள்கை தலைவராக தேர்வு!

Tue Jul 16 , 2024
Estonian Prime Minister resigns! Election of the European Union security policy chief!

You May Like