மகாராஷ்டிரா மாநிலம், பிவாண்டி நகரில் 22 வயதான ரிஷி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக, ரிஷி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ரிஷிக்கு வேறு ஒரு நபருடன் பழகம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. புது காதலன் வந்து விட்டதால் ரிஷி தனது பழைய காதலனை ப்ரேக் அப் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய ரிஷியின் முன்னாள் காதலன், எப்படியாவது ரிஷியை பழிவாங்க வேண்டும் என்று துடித்துள்ளார். இதற்காக அவர் போட்ட பிளான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் போட்ட திட்டத்தின் படி, அவர் ரிஷியின் தம்பியை கடத்தியுள்ளார். பின்னர் ரிஷியை போன் மூலம் தொடர்பு கொண்ட அவரது முன்னால் காதலன், தான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன ரிஷி, தனது முன்னாள் காதலன் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் இருந்துள்ளார்.
பின்னர் அவர்கள் ஒன்றாக சேர்ந்து ரிஷி மற்றும் அவரது தம்பியை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், ரிஷியை அவரது முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அலறி துடித்த ரிஷி, ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர், அவர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் ரிஷியின் முன்னாள் காதலனையும், அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Read more: “சார் என்ன தொடாதீங்க” கெஞ்சிய மாணவிகள்; பள்ளி வளாகத்தில் 59 வயது ஆசிரியர் செய்த காரியம்..