தமிழகத்தில், கடந்த சில தினங்களாக, பரவலாக மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் மழை பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருப்பதாவது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற பகுதிகளில், நேற்று மாலை ஒரு சில பகுதிகளில், கனமழை பொழிந்து இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை தொடங்கிய மழை, இன்று காலை வரையில், பொழிந்து இருக்கிறது. இதுவரையில், பொழிந்த மழை வரலாறுகளில் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இது இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இன்று காலை மழை மேகங்கள் எல்லாம், கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்று விட்டனர். அதன் காரணமாக, பகல் நேரத்தில் மழை பொழிவதற்கான வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், நேற்று இப்படி ஒரு மழை பொழியும் என்று, யாருமே கணித்திருக்க வாய்ப்பில்லை. இது சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை பொழிந்த 200 மில்லி மீட்டர் மழை போன்ற ஒரு அதிசய நிகழ்வாக தான் இருக்கிறது. அதாவது, 1.5 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. என்று தான் நம்மால் கணித்திருக்க முடியும். ஆனால், நேற்று 100 மில்லி மீட்டருக்கு மேல், மழை பொழிந்திருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், இன்று மாலை அல்லது இரவில் நேற்றைப் போலவே, பரவலாக மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.