சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி, தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிறுத்தி வைத்தது.
2021ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் 11 வயது சிறுமி தனது தாயாருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சிறுமியை தங்களுடன் பைக்கில் வரும்படி அழைத்தனர். அவர் மறுக்கவே சிறுமியின் மார்பகங்களைப் பிடித்து, பைஜாமாவை கிழித்து, அவளை அரைநிர்வாணமாக்க முயன்றனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வந்தபோது, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மீது பலாத்கார முயற்சி மற்றும் போக்சோ சட்டப்படி பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா விசாரித்தார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட பவன் மற்றும் ஆகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கின் உண்மைத்தன்மையை பார்க்கும் போது இது ஒரு பலாத்கார முயற்சி குற்றமாக இல்லை. அதாவது பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது உடைகளை கிழிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல என தீர்ப்பு வழங்கியிருந்தார். இந்நிலையில் அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அலகாபாத் நீதிபதி விதித்த வழங்கி சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு தடைவிதித்தது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துவதாக தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் போதிய சென்சிட்டிவிட்டி இல்லாமல் எழுதப்பட்ட தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.
நாட்டின் தீவிரமான பிரச்சனைகள் முற்றிலும் உணர்வு பூர்வமற்ற வகையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி இப்பபடி ஒரு தீர்ப்பை எழுதி இருப்பதாகவும் சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனித தன்மையற்ற வகையில் அணுகப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.