மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி விரைவில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் புத்தாக்க முயற்சிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நிதி அளித்து, மகளிரை அதிகாரம் படைத்தவர்களாக மாற்ற ஏதுவாக, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கியை அமைப்பது குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருதாகக் அத்துறைக்கான அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் தயாரிக்கப்பட்டப் பொருட்களுக்கான கண்காட்சியான சாராஸ் அஜீவிகா மேளா 2023 நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய அவர் நாடு முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 9 கோடி உறுப்பினர்கள், மாதம் தலா 100 ரூபாயையை சேமிக்க முன்வந்தாலே அதிகபட்ச டெபாசிட் செய்யப்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வங்கியை அமைக்க உதவும் என்றார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை மின்னணு வர்த்தக நிறுவனங்களான ஜெம், ஃப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவற்றில் சிரமமின்றி விற்பனை செய்ய முடியும் என்றார்.