fbpx

குட் நியூஸ்…! ரூ.50,000 வரை வழங்கும் திட்டம்…! 2024 டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு…!

பிரதமரின் ஸ்வநிதி திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் வீதியோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தை 2022 மார்ச் மாதத்திற்கு அப்பாலும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, 2024 டிசம்பர் மாதம் வரை கடன் வழங்கலாம். முதலாவது கடன் ரூ.10,000 இரண்டாவது கடன் ரூ.20,000 பெற்ற நிலையில் கூடுதலாக மூன்றாவது கடன் ரூ.50,000 வரை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்குமான ஸ்வநிதி சம்ரிதி அம்சம் நீட்டிப்பு.2022 நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி, 31.73 லட்சம் வீதியோர வியாபாரிகள், முதல் கடன் தொகையை பெற்றுள்ளனர். இதில் 5.81 லட்சம் பேர், ரூ.20,000 இரண்டாவது கடனைப் பெற்றுள்ளனர். இதில் 6,926 பேர் ரூ.50,000 என்னும் மூன்றாவது கடனைப் பெற்றுள்ளனர். 2024 டிசம்பர் மாதத்திற்குள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 42,00,000 வீதியோர வியாபாரிகள் பயன்களைப் பெற உள்ளனர்.

Vignesh

Next Post

புயல் கரையைக் கடந்தாலும் கடந்து செல்லாத மழை! 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்!

Sun Dec 11 , 2022
கடந்த வாரம் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு தீவிர புயலாக உருமாறியது. அதன் பிறகு புயலாக வலுவிழந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் கனமழையும், சில பகுதிகளில் அதிகன மழையும் பெய்தது. இதனைத் தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் […]

You May Like