பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் படி, 4.2 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200 ஆகும். 5 கிலோ இரட்டை சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200 ஆகும்
5 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.1,300 ஆகும். உஜ்வாலா 2.0-ன் தற்போதைய முறைகளின்படி, இலவச எரிவாயு திட்டப் பயனாளிகளுக்கு முதலாவது சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும். 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஆண்டுக்கு 12 மறு நிரப்புதல்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது.
பிரதமரின் இலவச எரிவாயு திட்டத்தில் தொடராமல் போனால், தகுதியான ஏழைக் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் உரிய பயன்களைப் பெற முடியாமல் போகலாம்.