fbpx

12,523 காலி இடங்கள்….! SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம் காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌:17.02.2023 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம் காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி ஆகும்‌. மேலும்‌, 01.01.2023 அன்றைய நிலையில்‌ எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 28 வயதுக்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌ மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்‌ படி வயது வரம்பில்‌ சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100 என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தேர்வினை தமிழ்‌ மொழியிலும்‌ எழுத மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அனுமதித்துள்ளது.

Vignesh

Next Post

Breaking Bad தொடர் நடிகர் வால்டர் வைட்டின் உள்ளாடை ஏலம்!... விலை எவ்வளவு தெரியுமா?

Sat Feb 18 , 2023
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஏலத்தில் Breaking Bad என்ற வெப் சீரீஸின் முக்கிய கதாபாத்திரமான வால்டர் வைட் அணிந்திருந்த வெள்ளை நிற உள்ளாடை 4 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஏலம் விடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல ஹாலிவுட் வெப் சீரீஸான பிரேக்கிங் பேட் தொடர் உலக புகழ்பெற்றது. இந்த தொடரில் பள்ளியில் வேதியல் ஆசிரியராக இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன் வால்டர் வைட், தனக்கு புற்றுநோய் இருப்பதை […]

You May Like