fbpx

மகிழ்ச்சி செய்தி…! TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு 25.10.2023 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2023 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதால் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 30.11.2023 லிருந்து 07.12.2023 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில்,பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 08.12.2023 மற்றும் 09.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்..! மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புகளுக்கு தடை...! முதலமைச்சர் அதிரடி உத்தரவு...!

Tue Nov 28 , 2023
மாணவிகளுக்கு மாலை நேரத்தில் சீக்கிரமே வகுப்புகளை முடிக்க வேண்டும் என கோச்சிங் நிறுவனங்களுக்கு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோச்சிங் நிறுவனங்கள் மாலையில் தாமதமாக மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மாணவிகள் தங்களது வீடுகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல், ஈவ் டீசிங் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்த […]

You May Like