fbpx

ஜாலி… 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 12 வரை விடுமுறை நீட்டிப்பு…! அரசு புதிய அறிவிப்பு…!

6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 9 வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில்;காலாண்டு தேர்வு முடிவு பெற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து வட்டாரக்‌ கல்‌வி, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, காலாண்டுத்‌ தேர்‌வு கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டு தேர்வு முடிந்தவுடன்‌ 01.10.2022 முதல்‌ 05:10.2022 வரை முதல்‌ பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும்‌ எழுத்தும்‌ முதற்கட்ட பயிற்சி தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில்‌ அளிக்கப்பட்டதால்‌, அதற்கு பதிலாக ஈடுசெய்யும்‌ விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர்‌ சங்கங்களும்‌, ஆசிரியர்களும்‌ கேட்டுக்கொண்டதன்‌ அடிப்படையில்‌ 06.10.2022, 07.10.2022 மற்றும்‌ 08.10.2022 ஆகிய மூன்று நாட்களும்‌ ஈடுசெய்யும்‌ விடுப்பாக கருதப்படும்‌. (மீதமுள்ள 2 நாட்கள்‌ பின்பு ஈடுசெய்யப்படும்‌) பள்ளிக்‌ கல்வி மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள 6-ம்‌ வகுப்பு முதல்‌12-ம்‌ வகுப்புகளுக்கு அக்டோபர்‌ மாதம்‌ 10ம்‌ தேதி அன்று பள்ளிகள்‌ திறக்கப்படும்‌,

தொடக்கப்‌ பள்ளிகளில்‌ 1-ம்‌ வகுப்பு முதல்‌ 5-ம்‌ வகுப்புகளை கையாளும்‌ ஆசிரியர்களுக்கு அக்டோபர்‌ 10,11, 12 தேதிகளில்‌ எண்ணும்‌ எழுத்தும்‌ இரண்டாம்‌ கட்ட பயிற்சி மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்ச்சி நிறுவன இயக்குநரின்‌ கடிதத்தில்‌ தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ 5-ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு மட்டும்‌ அக்டோபர்‌ 13-ம்‌ தேதி பள்ளிகள்‌ திறக்கும்‌ என அறிவுறுத்தப்படுகின்றது.

Vignesh

Next Post

மிக கவனம்... இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு டெங்கு உறுதி...! உடனடியாக மருத்துவரை அணுகவும்...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Wed Sep 28 , 2022
பருவமழை நோய்களைக்‌ கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும்‌ செயல்படும்‌ காய்ச்சலுக்கான தனிச்‌ சிறப்பு வார்டுகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும்‌ பன்றிக்காய்ச்சல்‌ போன்ற தொற்று நோய்கள்‌ மற்றும்‌ சாதாரண சளி, காய்ச்சல்‌ போன்றவற்றை தடுக்கவும்‌, உரிய நேரத்தில்‌ கட்டுப்படுத்தவும்‌ மாவட்ட நிர்வாகம்‌ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்‌ எடுத்து வருகிறது. மேலும்‌ […]
’மக்களே அடுத்த 3 மாதங்கள் உஷார்’..!! ’பருவகால காய்ச்சலுடன் இந்த காய்ச்சலும் அதிகரிக்குதாம்’..!!

You May Like