சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(29).இவர் சென்ற 5ம் தேதி இரவு தன்னுடைய நண்பரின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்று கொள்வதற்காக சென்றார். அதன் பிறகு நிகழ்ச்சி முடிவடைந்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3️ பேர் கொண்ட கும்பாபி பிரவீன் குமாரை வழிமறித்து நின்றுள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் பிரவீன் குமாரை மிரட்டியும், தாக்கியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின் அவர் வைத்திருந்த 1500 ரூ பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக ஆர்கே நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது. புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (22), சஞ்சய்( 23), வேலன் (20) உள்ளிட்டோர்தான் என்பது தெரிய வந்தது. ஆகவே அவர்கள் மூவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
அதோடு அவர்களிடமிருந்து 1500 ரூபாய் பணம் மற்றும் இந்த குற்ற செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் மீது ஏற்கனவே 2 வழக்குகளும், சஞ்சய் மீது 4 குற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.