வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை ஊர்மக்கள் ஒன்று திரண்டு கையும், களவுமாக பிடித்து, கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திரிபுரா மாநிலம் பிலோனியா அடுத்துள்ள ஈசன்சந்திர நகர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், வசித்து வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவருடன் அறிமுகம் உண்டானது. தன்னுடைய அண்ணன் மற்றும் அண்ணியுடன் அதே பகுதியில் அந்த இளம் பெண் வசித்து வந்துள்ளார். மேலும், அந்த நபரும் இளம் பெண்ணும் நெருங்கி பழகி வந்தனர்.
ஆகவே இருவருக்கும் இடையே இருந்த பழக்கம், நாளடைவில், கள்ளக்காதலாக மாறியது. ஆகவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, தங்களுடைய கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். அதோடு, அடிக்கடி இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாகவும் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தான், அந்த இளம் பெண்ணும், அந்த நபரும், நேற்று முன்தினம் அந்தப் பெண்ணின் வீட்டில் உல்லாசமாக இருந்தபோது, திடீரென்று அங்கு வந்த ஊர் மக்கள், அவர்களை கையும், களவுமாக பிடித்தனர். இருவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், உள்ளூர் மக்கள் அவர்கள் இருவரையும் ஒன்றாக மின்சார கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
அதன் பிறகு, அந்த கிராமத்தின் பஞ்சாயத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்து, அந்த கள்ளக்காதல் ஜோடியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த நபரின் மனைவியும், அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டார். பல மணி நேரம் அந்த கள்ளக்காதல் ஜோடி கட்டி வைக்கப்பட்ட நிலையில், இருந்துள்ளது. அப்போது இளம் பெண்ணின் முடியை பிடித்து, ஒரு பெண் அடிக்கத் தொடங்கினார். ஆனாலும், கள்ளக்காதல் ஜோடிக்கு உதவுவதற்கு அங்கு ஒருவர் கூட தயாராக இல்லை.
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த பகுதிக்கு விரைந்து வந்த நிலையில், காயமடைந்த ஆணுடன், அந்த பெண் மின்சார கம்பத்தில் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருப்பதை கண்ட காவல்துறையினர், அவர்களை ஊர்மக்களிடம் இருந்து, மீட்டனர். அதன் பிறகு பெலோனியா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து, யாரும், எந்தவிதமான புகாரும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.