பிபர்ஜாய் புயல் “மிகக் கடுமையான சூறாவளி புயலாக” தீவிரமடைந்துள்ளது என்றும், ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“கிழக்கு-மத்திய அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு எட்டு கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மும்பைக்கு மேற்கே 550 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. போர்பந்தரின் தென்மேற்கே, தேவபூமி துவாரகாவிலிருந்து 490 கிமீ தொலைவிலும், தென்மேற்கே, நலியாவிலிருந்து 570 கிமீ தொலைவிலும், தெற்கு, தென்மேற்கே மற்றும் கராச்சிக்கு தெற்கே 750 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளுது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.