fbpx

அசத்தல்…! பாலியல்‌ குற்றங்களிலிருந்து பெண்‌ குழந்தைகளை காக்க இமைகள்‌ காக்கும்‌ திட்டம்…! டிஜிபி அதிரடி அறிவிப்பு…!

தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம்‌ சார்பாக பாலியல்‌ குற்றங்களிலிருந்து பெண்‌ குழந்தைகளை காக்கும்‌ இமைகள்‌ திட்டம்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ பாலியல்‌ குற்றங்களில்‌ இருந்து பெண்‌ குழந்தைகளைபாதுகாக்கும்‌ வகையில்‌ காவல்துறை மற்ற அரசு துறைகளுடன்‌ இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்‌ பெண்‌ மூலம்‌ குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களைமுறையாக வழக்கு பதிவு செய்வது, முனைப்புடன்‌ புலன்‌ விசாரணை செய்வது, 60 நாட்களில்‌ குற்ற பத்திரிக்கை தாக்கல்‌ செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும்‌ மறுவாழ்வு ஏற்பாடு செய்வது, அவர்களின்‌ சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்வது, போன்றவை உறுதி செய்யப்படும்‌. மேலும்‌, மருத்துவர்கள்‌ மூலம்‌ பாதிக்கப்பட்ட பெண்‌ குழந்தைகளுக்கு விரைவான சிகிச்சை அளித்து மனநல ஆலோசனையும்‌ வழங்கப்படும்‌.

இத்திட்டத்தின்‌ மூலம்‌ பள்ளி கல்லூரி மாணவர்களுடன்‌ கலந்துரையாடல்‌, தெருநாடகங்கள்‌, துண்டு பிரசுரங்கள்‌ மூலம்‌ விழிப்புணர்வு செய்து பெண்‌ குழந்தைகளை காவல்துறை எனும்‌ இமைகள்‌ காக்கும்‌. இத்திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு துவங்கி வைத்தார்.

Vignesh

Next Post

மக்களே எச்சரிக்கை!... இந்த உணவுப்பொருட்களை பிரஷர் குக்கரில் சமைக்காதீங்க!... பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம்!

Sat Jun 24 , 2023
நாம் ஆரோக்கியமாக இருக்க பிரஷர் குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மாவுச்சத்து நிறைந்த உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாது. நம்மில் பெரும்பாலோர் பிரஷர் குக்கரில் சமைப்பதை விரும்புகிறோம். ஏனெனில் எந்த தொந்தரவும் இல்லாமல் விரைவாக உணவை சமைக்க இது உதவுகிறது. சமையலுக்கு வரும்போது எப்போதும் தாமதமாக வருபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி. பிரஷர் குக்கரில் சமைப்பது உண்மையில் வம்பு இல்லாத சமையல் விருப்பமாகும். இருப்பினும், பிரஷர் […]

You May Like