இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியிருக்கும் கௌதம் அதானி தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு உலகளவில் குறிப்பாக பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகியுள்ளார். இன்று 61 வயது பிறந்த நாள்-ஐ கொண்டாடும் கௌதம் அதானி 2 முறை செத்து பிழைத்த கதையைக் ஒரு இன்டர்வியூவில் கூறியுள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி Aap Ki Adalat என்ற நிகழ்ச்சியில் பேசிய போது அவருடைய பர்சனல் வாழ்க்கை குறித்து எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பேசினார். கௌதம் அதானி எப்போதும் அதிகமாக மீடியாக்களிடம் பேசுவது கிடையாது.
இந்த நிலையில் இந்த நேர்காணலில் கௌதம் அதானி தன்னுடைய குடும்பம், இழந்தது, பெற்றது எனப் பல விஷயங்களை ஜாலியாகப் பேசியுள்ளார். இந்தப் பேட்டியில் முக்கியமாகத் தனது வாழ்க்கையில் 2 முறை மரணத்திற்கு அருகில் சென்று வந்தது குறித்தும் பேசியுள்ளார் கௌதம் அதானி.
கௌதம் அதானி 1988 ஆம் ஆண்டில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் கமாடிட்டிஸ் வர்த்தகத்தைக் குஜராத் மாநிலத்தில் கட்டமைத்து வந்தார். இவரைக் கடத்தினால் பெரும் தொகையைப் பார்க்க முடியும் எனக் கடத்தல்காரர்கள் திட்டமிட்டு கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவன ஊழியர் சாந்திலால் படேல்-ஐ கர்னாவதி கிளப்பில் இருந்து காரில் முகமதுபுரா சாலையில் சென்றபோது துப்பாக்கி முனையில் கடத்தி சுமார் 1.5 – 2 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கேட்டு உள்ளனர். கௌதம் அதானி தரப்பில் இருந்து கடத்தல்காரர்கள் மத்தியில் பல்வேறு கட்ட பேச்சுவாத்தையில் கௌதம் அதானி மற்றும் சாந்திலால் படேல் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இந்த கடத்தல் நேரத்தில் கௌதம் அதானி தனது டென்ஷன் ஆகாமல், நிதானத்தை இழக்காமல் இருந்த காரணத்தால் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து 2வது முறையாக மரணத்திற்கு அருகில் சென்று எமன்-ஐ பார்த்து வந்த சம்பவம் நவம்பர் 26, 2008 அன்று தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலின் போது நடந்தது.
கௌதம் அதானி மும்பை தாஜ் ஹோட்டலில் இருக்கும் மசாலா கஃபே-வில் துபாய் போர்ட் சிஇஓ உட்பட தனது நண்பர்களுடன் வர்த்தகக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, தாஜ் ஹோட்டல் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. தாஜ் ஹோட்டலில் உயிருக்கு பயந்து சமையலறையில் பதுங்கியிருந்தோம், தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் தப்பித்தோம். இந்த சம்பவத்தின் போது வெறும் 15 அடி தொலைவில் தான் மரணத்தைப் பார்த்ததாக இந்தப் பேட்டியில் கௌதம் அதானி கூறியுள்ளார். தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த தீவிரவாதிகளைத் தான் பார்த்ததாகவும் கௌதம் அதானி தெரிவித்தார்.