வருவாயில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை செலுத்தாததால் 2024-25-ம் ஆண்டில் வருமான வரித்துறை 17 பேருக்கு தண்டனை பெற்றுத்தந்துள்ளது.
2009-10-ம் மதிப்பீட்டு ஆண்டுடன் தொடர்புடைய 2008-09-ம் நிதியாண்டில் வருமானவரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அரசு கருவூலத்தில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செலுத்தத் தவறியதற்காக, வருமான வரிச் சட்டம், 1961-ன் படி பிரிவுகள் 200 மற்றும் 204-ஐ மீறியதற்காக தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 276 பி மற்றும் பிரிவு 278பி ஆகிய பிரிவுகளின் படி மேற்கண்ட தவறு வழக்குப் பதிவு செய்யத்தக்க குற்றமாக கருதப்படும். மேற்கண்ட தவறு தொடர்பாக, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 276பி மற்றும் 278பி-ன் கீழ் வரி செலுத்தும் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்கள் மீது வருமான வரித்துறை சமீபத்தில் வழக்குப் பதிவு செய்தது.
பொருளாதார குற்றப்பிரிவு-1-ன், கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் முன் விசாரணைக்கு வந்த, இந்த வழக்கில் வரி செலுத்தும் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையின் முடிவில், தனியார் நிறுவனம் மற்றும் அதன் மூன்று நிறுவனங்கள் மீது குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. 2008-09 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 276பி மற்றும் 278பி-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம், அதன் இயக்குநர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக வருமான வரித்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எல்.முரளிகிருஷ்ணன், ஆஜரானார்.
ஏ.சி.ஜே.எம் அவர்களால் 20.12.2024 தேதியன்று வழங்கப்பட்ட உத்தரவில் வரி செலுத்தும் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இயக்குநர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 1,00,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.